I.N.D.I.A கூட்டணியில் உள்ளவர்கள் போதைப் பொருள் கடத்துபவர்களாக உள்ளனர் : எல்.முருகன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 7:19 pm

I.N.D.I.A கூட்டணியில் உள்ளவர்கள் போதைப் பொருள் கடத்துபவர்களாக உள்ளனர் : எல்.முருகன் விமர்சனம்!!

நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் தி.மு.க. ஈடுபட்டது. ஆனால் தற்போது போதைப்பொருள்கள் கடத்தும் கட்சியாக மாறிவிட்டது.

தி.மு.க. முக்கிய நிர்வாகி ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். குஜராத் வழியாக போதைப் பொருள் கடத்துவதை மத்திய அரசு கண்காணித்தன் மூலமே அவை பிடிப்பட்டு வருகிறது, இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் போதைப் பொருள்கள் கடத்துபவர்களாக உள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 221

    0

    0