40 வருஷமா அரசியல் பண்றேன்..நேற்று வந்த விஜய்க்கு 50 லட்சம் உறுப்பினரா? கூத்தாடி பின்னாடி போகாதீங்க.. வேல்முருகன் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 11:20 am

40 வருஷமா அரசியல் பண்றேன்..நேற்று வந்த விஜய்க்கு 50 லட்சம் உறுப்பினரா? கூத்தாடி பின்னாடி போகாதீங்க.. வேல்முருகன் ஆவேசம்!

சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் எ இராசேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தெரிவித்ததாவது..

” தமிழின மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் முன் வந்து நிற்பேன். எனக்கு தற்போது வருகின்ற கோபமும் வேகமும், ராஜேந்திரன் அய்யாவுக்கு அப்போதே வந்தது என்பது பெருமைக்குரிய விஷயம்,

அவர் வாழ்ந்த சித்தாந்தத்தை குடும்ப உறுப்பினர்களும் அந்தக் கோட்பாடு உடன் வாழ்த்து வருகிறார்கள் என்பது அரிதான விஷயமாக இருக்கிறது. மிகப்பெரிய ஆளுமையின் பேச்சு, எழுத்து, ஆகியவற்றை வருகின்ற சமூகம் பின்பற்ற வேண்டும்.

நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அந்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை. உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் அவரது இணையதளம் முடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிடுகிறார்கள்.

கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ரசிகர்கள் அதனால் அப்படி நடந்து கொள்ளக் கூடும்.

தாத்தன் பாட்டன் இல்லாமல் தனி ஒரு ஆளாக வந்து சாதனை படைத்தவர் ராஜேந்திரன். அவருக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகப்பெரும் பாக்கியம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…
  • Close menu