நீங்கள் மட்டும் இல்லைனா – ஷாருக்கான் காலில் விழுந்த பிரபல இயக்குனர் வைரல் வீடியோ..!

Author: Vignesh
11 March 2024, 6:57 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

பிரமாண்டமாக ஜவான் படம் வெளியானது. இந்த மிகப்பெரிய ஹிட் படம் மூலமாக இயக்குனர் அட்லி தற்போது பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல டாப் ஹீரோக்கள் வெயிட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். அட்லி அடுத்தது தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை இயக்கப் போவதாகவும், அதற்கு சம்பளமாக 60 கோடி ரூபாய் வாங்குகிறார் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

atlee

இந்த நிலையில், நேற்று நடந்த ஜி சினி விருதுகள் விழாவில் அட்லீ அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த விழாவில், அட்லீக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டதும் அட்லீ எழுந்து ஷாருக்கானின் காலில் விழுந்து வாழ்த்து பெற்று விட்டு அதன் பின் மேடை ஏறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?