தமிழக மக்களை விட இண்டியா கூட்டணி தான் முக்கியம்… காவிரி விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் திமுக – அண்ணாமலை ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 8:26 am

இண்டியா கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும்.

இதனைக் காரணம் காட்டி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்காமல் காங்கிரஸ் அரசு மறுப்பதை, தனது இந்தி கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக.

இந்தி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 211

    0

    0