ஸ்பெஷல் பரிசு கொடுத்த நடிகர்.. எக்கச்சக்க மகிழ்ச்சியில் த்ரிஷா..!
Author: Vignesh12 March 2024, 8:19 pm
நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.
இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.
இதனிடையே, தமிழை தாண்டி தொலுங்கிலும் இப்போது படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா. சிரஞ்சீவி படத்தில் அவருக்கு ஜோடியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க உள்ளார். இந்த நிலையில், சிரஞ்சீவி நடிகை த்ரிஷாவிற்கு டெம்பரேச்சரை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதியுடன் கூடிய அதிநவீன மக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அதன் விலை 35 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.