‘விநாயகா… கணேஷா… காப்பாத்து’… மூதாட்டியை முட்டி தூக்கி வீசிய காட்டு யானை… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 12:26 pm

கோவையில் மூதாட்டி தாக்க வந்த காட்டு யானை: விநாயகா, கணேசா காப்பாற்றுங்கள் என்று கூச்சல் இட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், தண்ணீர், உணவு எடுத்துக் கொண்டு, அதிகாலை அடர் வனத்தை நோக்கி சென்று விடும்.

கோடை காலம் ஆரம்பித்த நிலையில் யானைகள் நீர், உணவுக்காக ஊர் பகுதிகளுக்கு அதிக அளவில் வர துவங்கி உள்ளது. மலைகள் அருகே உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, வீடுகளில் உள்ள அரிசி பருப்புகளை தின்று சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையிலே, நேற்று இரவு பேரூர் மாதம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் அருகே வந்த காட்டு யானை மூதாட்டியை தாக்கி தள்ளி விடுகின்ற சி.சி.டி.வி காட்சிகளும் பதிவாகி உள்ளது. மேலும். அந்த மூதாட்டி விநாயகா, கணேசா காப்பாற்றுங்கள் என்று கூச்சல் இடுகிறார்.

சத்தம் கேட்டு அந்த காட்டு யானை அவரை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து சென்று விடுகிறது. இந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

  • Rajinikanth Apologize To Nepoleon போன் போட்டு மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்… நேற்று என்ன நடந்தது?
  • Views: - 434

    0

    0