அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது.. பங்காளி கட்சி-னு நிரூபிச்சிட்டீங்க ; அண்ணாமலை திடீர் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 8:07 pm

அரைவேக்காடுத்தனமாக யாரை காப்பாற்ற முன்னாள் முதலமைச்சர் அறிக்கை விடுகிறாரா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் சரித்திர புத்தகத்தை சரியாக படிக்க வேண்டும். முதலமைச்சர் என் மீது கிரிமினல் அவதூறு வழக்கு போட்டு உள்ளார். போதை வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும். என் மீது வன்மத்தை தீர்த்து கொள்வது பதில் அல்ல. மக்கள் பதில் கேட்டால் சொல்லாமல் இருப்பதால் மக்களுக்கு முதலமைச்சர் மீது சந்தேகம் அதிகமாகிறது.

சென்னையில் உள்ள குடோனில் நடத்திய சோதனைகளில் லேப்பாக இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து கொண்டு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் எங்கள் அப்பன் குதிர்க்குள் இல்லை என்பது போல் என் மீது வழக்கு தொடர்ந்து நான் தப்பு எதுவும் செய்ய வில்லை என்று சொல்வது போல் உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எதுவும் தெரியாமல் பேசுவது ஆச்சரியம் மட்டுமல்ல வருத்தம். நாகலாந்து, ஹிமாச்சல் பிரதேசம், குஜ்ராத் போன்ற பகுதிகளில் முந்தரா துறைமுகத்தில் பிடித்து இருப்பதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம்சாட்டுகிறோம். பங்காளி கட்சி என்பதை முன்னாள் முதலமைச்சர் உர்ஜிதம் செய்கிறார். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. முன்னாள் முதலமைச்சர் யாரை காப்பாற்ற அறிக்கை விடுகிறார், எனக் கூறினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!