70 வயதில் ஜாக்கிஜானின் ரீசன்ட் கிளிக்.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே..!

Author: Vignesh
15 March 2024, 1:31 pm

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஜாக்கிஜானை அறிமுகப்படுத்தியதே விஜய் டிவி மற்றும் சன் டிவி என்று சொல்லலாம். காரணம் அதிரடி திருவிழா, ஆக்சன் வாரம் என ஜாக்கிஜான் நடித்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வந்தனர். எப்படி இவர் இதையெல்லாம் செய்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இவரது படத்தில் சண்டை காட்சிகள் அமைந்திருக்கும்.

ஆரம்பத்தில், புரூஸ்லீ நடிப்பில் வெளியான படங்களில் துணை நடிகராக நடிக்க தொடங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்கிஜான் அதனை தொடர்ந்து ஹீரோவாகவும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக திறமைகளில் கலங்கினார். சீனா முதல் ஹாலிவுட் வரை தனது ஆக்சன் மற்றும் காமெடி கலந்த நடிப்பு திறமையால் உலக சூப்பர் ஸ்டார் ஆக மாறினார்.

jackie chan

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பிக் எனும் இடத்தில் பிறந்த ஜாக்கிஜான் 69 வயதை கடந்து அடுத்த மாதம் 70 வயதை தொடும் நிலையில், தற்போது ஜாக்கிசானின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் முக்கியமாக 90களில் பிறந்த 90 s கிட்ஸ் சிறுவயதில் நாம் பார்த்த ஜாக்கிஜானா இது என கடும் வருத்தத்தில் உள்ளனர்.

jackie chan
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?