7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்..தமிழகத்தில் எப்போது தெரியுமா? தேதியுடன் வெளியான முக்கிய தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 2:47 pm

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்..தமிழகத்தில் எப்போது தெரியுமா? தேதியுடன் வெளியான முக்கிய தகவல்!

மக்களைவ தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலுங்கானா, புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 174

    0

    0