பணத்துக்காக பண்ணல.. வாய்ப்புக்காக Adjust பண்ணிக்க ரெடியா இருந்தேன்.. இனியா ஓபன் டாக்..!
Author: Vignesh15 March 2024, 5:48 pm
தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால், சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இனியாவுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
இதனையடுத்து சன்டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். அதுபோக சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் இனியா அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இதில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் எல்லாம் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருகிறாராம். கவர்ச்சியை கையிலெடுக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு எதிர்பார்த்த பலனைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர். இனியா இந்த படத்தில் நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில், இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவுக்கு புதிது என்பதால் அவருடன் நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீனிலும் ஜேம்ஸ் கார்த்திக் அவரது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டார். ஜேம்ஸ் கார்த்திக் தான் அதிக டேக் எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால், அதிக டேக் எடுத்தது என்னமோ நான் தான் அவர் டெடிகேட்டாக நடித்தார் என்று இனியா தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நான் நடித்தது பணத்துக்காக அல்ல இந்த படத்தின் கதை நன்றாக இருந்ததால் தான் இந்த படத்தில் நடித்தேன் என்று இனியா தெரிவித்துள்ளார்.