சி.வி. சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 8:47 pm

சி.வி. சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யவும் சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிமன்றம், மனு குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 218

    0

    0