ஆற்று நீரில் தீவைத்து ஆபத்தான சாகசம் ; ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் 2k கிட்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 10:42 am

ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றி தீயை பத்த வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞரின் ஆபத்தான சாகச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தலைமுறை இளைஞர்களும், சமூக வலைத்தளங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று சொல்லுமளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. குறிப்பாக, 2K கிட்ஸ்க்கு சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், அதில் சாகசம் செய்வதும் அவர்களின் ஆகச்சிறந்த சாதனையாகவும், பிறரைக் கவரும் விஷயமாகவும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், தாங்கள் செய்யும் சாகசங்களை படம் பிடித்து சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு அப்போது சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது. பெரிதாக சர்ச்சையை கிளப்பினால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது இல்லை என்றால் அதனை கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், ஆற்றில் உள்ள மீன்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் வகையில், இளைஞர்கள் சிலர் ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றுகின்றனர். பின்பு பெட்ரோல் ஊற்றி தீயை பத்த வைக்கின்றனர் அப்போது இளைஞர் ஒருவர் மேலிருந்து ஆற்றின் நீரில் பற்றி எரியும் தீயில் குதிக்கிறார். இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த காட்சியானது தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஆற்றில் உள்ள மீன்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இளைஞர்கள் சிலர் ஆற்றின் நீரில் தீயை பற்றவைத்து குதித்து, அதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?