இவன் அந்த ஆளு தானா?.. சீனியர் நடிகையால் சீரியல் நடிகர் ஸ்ரீ குமார் காட்டம்..!

Author: Vignesh
16 March 2024, 3:45 pm

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் சின்ராசு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில் தான் எஸ்சி கேட்டகிரியை சேர்ந்தவர் என்பதால், சினிமா துறையில் பட்ட அவமானங்கள் குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். குறிப்பாக, தன்னுடைய அப்பா தாஸ்புரம் ஸ்லிம் ஏரியாவில் இருந்து வந்தவர்.

Shreekumar

அதனால், அவர் எஸ்சி அதனால், நான் எஸ் சி என்ற காரணத்தால் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். சில நேரங்களில் சிலர் அப்பர் காஸ்ட் என்கிற பெயரில் நம்மை மட்டம் தட்டும் போது நான் சும்மா இருக்க மாட்டேன். அந்த நேரத்தில், நான் ஈக்குவலா எல்லாத்தையும் பாருங்க என்று சொல்வேன். அதனால், நிறைய பிரச்சனைகள் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை நான் ஒரு படத்தில் நடிப்பதற்காக போயிருந்தேன். பொதுவாக என்னுடைய தமிழ் பேச்சு வழக்கில் சென்னை லாங்குவேஜ் வரும் அந்த மாதிரி தான்.

Shreekumar

அந்த படத்தில், நான் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு ஒரு நடிகை அதுவும் சீனியர் நடிகை அவங்க என்னை பார்த்ததும் என்ன இவன் இப்படி பேசிக்கிட்டு இருக்கான். இவன் அந்த ஆளு தானே என்று கேட்டார். அப்போது, அருகில் இருந்தவர் ஆம் வேறு வழியில்லாமல் அதற்காகத்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என்று சொன்னார். இந்த மாதிரி சினிமா துறையில் நான் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன். திறமைக்கு மட்டுமல்ல சாதியை வைத்து மதிப்பிடுவதுதான் இன்னும் இருக்கிறது. இதுபோல நான் ஒரு சில இடங்களில் அவமானப்படுத்தப்படும் போது எதிர்த்து பேசியதால் பல பிரச்சினைகளையும் அனுபவித்து இருக்கிறேன்.

Shreekumar

அதேபோல பணம் இல்லாமலும், நான் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். ஒருமுறை எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் சில பிரச்சனை வந்தது. அதனால், அவரிடம் நான் தனியாக சாதித்து காட்டுகிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். அப்போ ஒரு ஆறு வருஷம் நான் தனியா இருந்தேன். அந்த நாட்களில் பணத்தின் அருமையும் நான் புரிந்து கொண்டேன். பணம் இல்லாமல் நான் நாய் படாத பாடு பட்டேன். இதெல்லாம் நான் என்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் என்று அந்த பேட்டியில் எமோஷனலாக ஸ்ரீகுமார் பேசியிருக்கிறார்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 174

    0

    0