பார்த்தால் இப்பவும் பயமா இருக்கு.. கமலுக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்துகொண்ட சாந்தி வில்லியம்ஸ்..!

Author: Vignesh
16 March 2024, 5:45 pm

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பல சீரியல்கள் இல்லத்தரசிகளை கட்டுப் போட்டு வைத்துள்ளது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர் ’. வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

santhi villiams-updatenews360

தற்போது, பலர் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில் தொடங்க விரும்புகிறார்கள். நாயகிகளை தாண்டி வில்லி ரோலில் நடிப்பவர்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், சாந்தி வில்லியம்ஸ் 12 வயதில் நடிக்க தொடங்கினர். 1999ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையில் சாந்தி வில்லியம்ஸ் நடிக்க தொடங்கினார். மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கலக்கினார். சாந்தி வில்லியம்ஸ் 1979ம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை திருமணம் செய்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

santhi villiams-updatenews360

முன்னதாக, திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல்ஹாசனுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் உடன் படப்பிடிப்பில் சண்டை வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் நடிகர் கமலை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க சென்றுள்ளார். கமிழுக்கு ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவரை சுத்தமாகவே பிடிக்காதாம். ஆனால், அந்த ஒளிப்பதிவாளரை பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலமான நடிகையாக சாந்தி வில்லியம்ஸ். இவர் நடித்த ஒரு படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

shanthi williams

அப்போது, நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நான் இறந்து விடுவேன் என கூறி நடிகை சாந்தியை மிரட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார் வில்லியம்ஸ். அப்போது, நடிகை சாந்திக்கு 19 வயது வில்லியம்ஸ்க்கு 46 வயது திருமணத்திற்கு பின் கணவர் வில்லியம்ஸ் இடமிருந்து பல துன்புறுத்தல்களையும் பிரச்சனைகளையும் சாந்தி வில்லியும் சதித்துள்ளார்.

santhi villiams-updatenews360

இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கமலஹாசன் உடன் இணைந்து பணியாற்றிய விஷயங்கள் குறித்தும் அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளார். அதாவது, ஆரம்ப காலகட்டத்தில் கமலஹாசனிடம் தான் நடனம் கற்றுக் கொண்டதாகவும், இதன் பின்னர் அவருடன் இணைந்து படங்களில் நடனமாடியுள்ளனர்.

shanthi williams

தனது நடன குருவாக கமலஹாசனை பார்ப்பதாகவும், மேலும் கமல் என்றாலே சாந்தி வில்லியம்ஸ்க்கு எப்போதும் பயம் தானாம். தன்னை எங்கு பார்த்தாலும் ஏன் என்னடி எப்படி இருக்க என்றுதான் கமல் கேட்பாராம். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்பு பாபநாசம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சாந்தி வில்லியம்ஸ் நடித்துள்ளார். அப்போது, அந்த படப்பிடிப்பில் வணக்கம் மாஸ்டர் ஜி என்று பயந்தபடியே சொன்னேன்.

அதற்கு கமலஹாசன் நீ என்னடி இப்பவும் பயப்படுற உனக்கு வயசு ஆயிடுச்சு எனக்கும் வயசாயிடுச்சு ஏன் இன்னும் என்னை பார்த்து பயப்படுற என்ற கிண்டல் செய்தாராம். அதோடு, நீ இந்த மாஸ்டர் ஜினு கூப்பிடுறத விடமாட்டியா என்றும் கேட்டு உள்ளார் கமல். இந்த விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்து கொண்டார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 217

    0

    0