தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு விளம்பரங்கள் அகற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2024, 6:56 pm

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு விளம்பரங்கள் அகற்றம்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த,அரசு விளம்பர படங்கள் அகற்றம் இதை எடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் மக்கள் நல திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரச விளம்பர படங்கள் அகற்றப்பட்டன.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…