திருச்சியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோ.. பம்பரம் சின்னத்தில் போட்டி என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 4:29 pm

திருச்சியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோ.. பம்பரம் சின்னத்தில் போட்டி என அறிவிப்பு!!

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதமானது.

இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் அவை தலைவர் அர்ஜூனமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.

பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். திருச்சி தொகுதியில் யார் போட்டியிட வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிக்காக பிரசாரம் செய்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் துரை வைகோவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து, திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ அறிவிக்கப்பட்டார்.

  • lal salaam movie released in ott soon ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!