பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 10 தொகுதிகள்… அண்ணாமலையை சந்தித்த பின் அன்புமணி கூறிய சுவாரஸ்ய விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 8:52 am

பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 10 தொகுதிகள்… அண்ணாமலையை சந்தித்த பின் அன்புமணி கூறிய சுவாரஸ்ய விளக்கம்!

விழுப்புரம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாஜகவுடனான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கையெழுத்திட்டார். அவருடன் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜிகே மணி, ஏ கே மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பாஜக சார்பில் அண்ணாமலை மத்திய இணையச்சர் எல் முருகன் கலந்து கொண்டு கூட்டணி கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவிற்கு பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக கையெழுத்திடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராதாஸ் பத்தாண்டு காலமாக பாமக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கங்கமாக இருந்து வருவதாகவும், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் நாட்டின் நலன் கருதியும் மோடி நல்லாட்சி தொடரவும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்தவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளதால் அதனை பூர்த்தி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று மோடி மிகப்பெரிய வெற்றி அடைவார் என கூறினார்

மூன்றாவது முறையாக பாஜக வேட்பாளர்கள் 400 வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமையும் என்றும் புரட்சிகரமான அரசியல் மாற்றம் கொண்டு வர மோடி செயல்பட்டு கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் மாற்று அரசியலை கொண்டு வர மோடி செயல்படுவதாக தெரிவித்தார்.

பாமகவுடன் கொள்கை மாறாமல் செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் பாமக எடுத்த முடிவு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார் என்றும் இந்த கூட்டணி இந்திய அளவில் வலு சேர்க்கும் பாமகவிற்கு 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறினார்.

பாமக போட்டியிட உள்ள உத்தேச தொகுதிகள் தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்பதூர், மத்திய சென்னை, கடலூர், சிதம்பரம். பாமக போட்டியிட உள்ள பத்து தொகுதிகள் பட்டியல் பிறகு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?