திருவாரூரில் பாஜகவின் முக்கிய விக்கெட் காலி : பூண்டி கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 9:54 am

திருவாரூரில் பாஜகவின் முக்கிய விக்கெட் காலி : பூண்டி கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!!

திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனம் பகுதியை சேர்ந்த முருகையன் மகன் சக்தி என்பவர் பாஜக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் இன்று திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த பாஜக ஒன்றிய செயலாளர் இடும்பாவனம் சக்திக்கு இருவர்ண வேட்டியை அணிவித்து திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வரவேற்றார்.

  • Salary in cinema 25 வருஷம் சினிமால இருந்தா சம்பளம் கிடைக்காது, ஆனால்?- காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ