பாஜகவுக்கு 400 எம்பிக்களுக்கு மேல் வந்தால்தான்… விவசாயிகள், ஏழை மக்கள் நன்மை பெற முடியும் ; அண்ணாமலை..!!
Author: Babu Lakshmanan19 March 2024, 2:16 pm
வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவையில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், இன்று சேலத்தில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வசான், ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மேடையில் பொன்னாடை போற்றிய ராமதாஸை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார்.
தொடர்ந்து, பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- மூச்சு இருக்கும் வரை தேசம் முதன்மையானது என கருதுபவர் பிரதமர் மோடி. வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர்.
தொடர்ந்து 3வது முறையாக ஏழை தாயின் மகன் பிரதமர் மோடி ஆட்சியைப் பிடிப்பார். ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி.
பாஜக கூட்டணியில் 400 எம்பிக்களுக்கு மேல் வந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நன்மைகள் ஏற்படும். 400 இடங்களுக்கு மேல் பாஜக வரும் போது தான் நாட்டில் இருந்து வறுமை ஒழிக்கப்படும், எனக் கூறினார்.