இரவு நேர ரோந்தில் வசூல் வேட்டை… வைரலான வீடியோ : கூண்டோடு சிக்கிய 6 போலீசார்.. கூட்டுச்சதி செய்த இளைஞரும் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 2:33 pm

இரவு நேர ரோந்தில் வசூல் வேட்டை… வைரலான வீடியோ : கூண்டோடு சிக்கிய 6 போலீசார்.. கூட்டுச்சதி செய்த இளைஞரும் கைது!!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டி என்ற இடத்தில் இரவு நேர ரோந்து காவல்துறையினர் வாலிபர் ஒருவர் சேர்ந்து கொண்டு வாகனங்களை நிறுத்தி பணம் வாங்கும் காட்சி வெளியானது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த வடிவேல், செல்வம், ஆகிய இரண்டு எஸ்.எஸ்.ஐ.களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை, ஆகிய நான்கு காவலர்களையும் சேர்த்து மொத்தம் 6காவல்துறையினரை கூண்டோடு ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறி சாலையில் வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த முசிறி தா.பேட்டையை சேர்ந்த ராஜ்கமல் ( 32 ) என்பவரை காட்டுப்புத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி எஸ்பி மேற்கொண்ட இந்த அதிரடி சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?