57 வருஷமா திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்து என்ன பயன்? மேடையில் ஓபிஎஸ் முன்னிலையில் பேசிய அன்புமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 4:16 pm

57 வருஷமா திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்து என்ன பயன்? மேடையில் ஓபிஎஸ் முன்னிலையில் பேசிய அன்புமணி!!

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், இன்று காலை தான் பிரதமர் மோடி 3வது முறையாக இந்திய பிரதமராக வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உள்ளது. நாட்டின் நலன் கருதி, தமிழகத்தின் நலன் கருதி இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். கடந்த 57 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகள் தான் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டு இறுகிறார்கள். அதில் இருந்து நமக்கு மாற்றம் வர வேண்டும். மக்கள் மாற்றத்துக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அந்த ஏக்கத்தை தணிக்க தான் பாஜக பாமக கூட்டணி அமைத்துள்ளது என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மேடையில் ஓ.பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன் உள்ளிட்ட திராவிட கட்சிகள் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!