மோடிக்கு உதயநிதியை தூது அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின்… கண்மறைவில் நடக்கும் பேரம் ; முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு..!!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 8:31 pm

இரட்டை வேடம் போடுவது திமுக தான் என்றும், எடுத்த முடிவில் நிலையாக இருப்பவர் எடப்பாடியார் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் 19 ம்தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, வருகிற மார்ச் 26ம் தேதி மாலை 04.00 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் எம்.ஜி.ஆர் திடலில் தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

இதுகுறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் கூறியதாவது :- இன்றைக்கு தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி வலுப்பெற வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் யார் நின்றாலும் அவர்களை வெற்றி பெற செய்ய நாம் அனைவரும். அயராது உழைக்க வேண்டும்.

இன்றைக்கு சரியான நேரத்தில் சரியான முடிவினை எடப்பாடியார் எடுத்துள்ளார். அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கக் கூடிய தலைவராக, எதற்கும் அஞ்சாத தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி இன்றைக்கு திகழ்கிறார். இன்றைக்கு மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் இவர்தான். ஆனால், விடியா தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின் மோடியை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தனது மகனை வைத்து அவரிடம் பேசி வருகிறார். இப்படி மக்களை ஏமாற்றி இரட்டை வேடம் போடுகிறது திமுக. ஆனால், எடப்பாடியார் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என எடுத்த முடிவில் இன்று வரை உறுதியாக உள்ளார். என்றார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநரணி செயலாளர் இரா.சுதாகர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!