இது மாதிரி பிரிவினைவாத பேச்சுக்கள் இனி வரக்கூடாது… மத்திய அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
19 March 2024, 9:38 pm

தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிப்பதற்கான முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி பெற்று வந்த நபரே, பெங்களூரூவில் உள்ள கஃபேவில் குண்டு வைத்ததாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Soori speech Viduthalai 2 அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
  • Views: - 234

    0

    0