அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது… ஜெயவர்தன், சரவணன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு
Author: Babu Lakshmanan20 March 2024, 10:32 am
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. வேட்பாளர்களை இன்றோ அல்லது நாளையோ அறிவித்து விடும். பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், 16 தொகுதிகளுக்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு – இரா.மனோகர்
சென்னை தெற்கு – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
அரக்கோணம் – விஜயன்
கிருஷ்ணகிரி ஜெயபிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் (தனி) – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – தங்கவேல்
சிதம்பரம் (தனி) – சந்திரகாசன்
நாகை (தனி) – கர்சித் சங்கர்
மதுரை – சரவணன்
தேனி -நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்