விவாகரத்துக்கு பின் ஒரே இடத்தில் சமந்தா – நாக சைதன்யா.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
20 March 2024, 11:21 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

samantha - updatenews360

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

naga chaitanya samantha

இந்த நிலையில், இருவருக்கும் நடுவில் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக இதுவரை சொல்லவில்லை. எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது, 2024 இல் அடுத்து வர இருக்கும் ஷோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சமந்தா நடிக்கும் Citatel Honey Bunny சீரிஸ் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் Dhootha என்ற தெலுங்கு வெப் சீரிஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அறிமுகப்படுதப்பட்டன. இருவரும் விவாகரத்துக்கு பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், ஒரே நேரத்தில் மேடையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 210

    0

    0