கமல்ஹாசனை கிண்டல் செய்த ரஜினி… உதாரணத்திற்கு தான் சொன்னேன்.. போட்டுக் கொடுத்திடாதீங்க என நழுவிய ரஜினி..!

Author: Babu Lakshmanan
20 March 2024, 4:14 pm

அவன் ஒரு தோட்டக்காரன், சமையல்காரன், டிரைவர் என யாராக இருந்தாலும் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை வடபழனியில் 250 படுக்கை வசதியுடன் அதிநவீன காவேரி மருத்துவமனையை பிரபல நடிகர் ரஜினிகாந்த் துவக்கி வைத்தார். இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும் போது, 25 வருடங்களாக எந்த விதமான வணிக நிறுவனங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில்லை, அதற்கு காரணம் இந்த கட்டிடத்தில் ரஜினிகாந்தும் பார்ட்னர் என பேசுவார்கள். ஆகையால் நான் கலந்து கொள்வதில்லை.

மருத்துவர்கள், செவிலியர்களால் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த இடத்தில் சம்சாரம் அது மின்சாரம் படத்திற்காக செட் போடாமல் வீடே கட்டினார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த ராசியான இடத்தில் மருத்துவமனையை கட்டியுள்ளதால் வெற்றி பெறும்.

எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், 99 சதவீதம் மீட்டுவோம், ஆனால் 1 சதவீதம் மட்டும் சந்தேகம் என்று கூறியதால், எனக்கு ஒரு சதவீதம் மட்டுமே என்ற வார்த்தை தலையில் ஓடிக்கொண்டே இருந்தது. இருப்பினும் என்னை முழுவதுமாக சரி செய்தார்கள்.

யாருக்கு ஒழுக்கும், (decipline) இல்லையோ வாழ்க்கையில் முன்னேற முடியாது. முதலில் ஒழுக்கம், நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகிய நான்கு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். அவன் ஒரு தோட்டக்காரன், சமையல்காரன், டிரைவர் என யாராக இருந்தாலும் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும். முதலில் காவேரி மருத்துவமனை எங்கே உள்ளது என்று கேட்டால் கமல்ஹாசன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளது என்றனர். ஆனால் இன்று காவேரி மருத்துவமனை அருகே தான் கமல்ஹாசன் வீடு உள்ளது என்று சொல்கின்றனர். சும்மா உதாரணத்திற்கு தான் சொல்கிறேன், கமலுக்கு எதிராக போட்டு விட வேண்டாம்.

கமலஹாசனை கலாட்டா செய்வதாக போட்டுவிட வேண்டாம், இங்கு வந்தால் ஒரு சில மீடியாக்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்தேன். இங்கு நிறைய பேர் வந்துள்ளார்கள். வீடியோவை பார்த்தால் எனக்கு பயம் ஆகும். இது தேர்தல் நேரம் என்பதால் மூச்சு வீட்டாலே பயமாக உள்ளது. சென்னை என்பது இந்தியாவில் மருத்துவ சுற்றுலா கழகமாக விளங்கி வருகிறது, இது மருத்துவர்கள் மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம், எனக் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 306

    0

    0