நீயெல்லாம் செட் ஆகமாட்ட, நீ அந்த மெட்டீரியல் கிடையாது.. முத்தழகு சீரியல் நடிகை வேதனை..!

Author: Vignesh
22 March 2024, 4:24 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஷோபனா. இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

shobana muthazhagu

அதில், அவர் கூறுகையில் என் தாத்தா வீட்டில் தான் தங்கி படித்தேன். அப்பா, அம்மா துணை இல்லாமல் தாத்தா என்னை வளர்த்தார். கல்லூரியில், படிக்கும் போது யாரும் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். அப்போது, நான் எனது நண்பர்கள் சாப்பிடும் தட்டில் இருந்து எடுப்பேன். அவர்கள் ஷோபனா வரா ஒளிச்சு வைங்க என்று கூறுவார்கள். எனக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது.

shobana muthazhagu

நான் ஒரு நாளைக்கு ஒருவேளை தான் சாப்பிடுவேன். பின்னர், நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு இயக்குனர் என்னிடம் நீ எல்லாம் ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட நீ அந்த மெட்டீரியல் கிடையாது என்று சொன்னது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், விழவே கூடாது போராட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு, தான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று தனது வேதனைகளை தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?