பாஜக கூட்டணிக்கு பிறகு காவி வேட்டியுடன் வந்த ஓபிஎஸ்… இந்தத் தேர்தலில் விஸ்வரூபம் எடுப்பேன் என சபதம்…!!!
Author: Babu Lakshmanan22 March 2024, 4:46 pm
அநீதி நீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என் விஸ்வரூபம் எடுப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று அறிவித்த பிறகு தென் மாவட்டத்திற்கு, காவி வேட்டி அணிந்தபடி, வருகை தந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாஜக மாவட்ட செயலாளர்கள் மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வரவேற்பை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகள் எண்ணங்களின் பிரதிபலிக்கும் வகையில் தான் தேர்தல் அறிக்கை இருக்கும். அதை யார் நடைமுறை படுத்துகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ராமநாதபுரம் மக்கள் நீதி தர்மத்தின் அடிப்படையில் நீதிகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை கடந்த காலத்தின் வரலாறு.
தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தத்தில் நீதி கேட்டு போட்டியிடுகிறேன். அதன் அடிப்படையில் தான் மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். பாஜகவிற்கு எதிரான தேர்தல் அறிக்கையை குறித்து அவர்களிடம் (அதிமுக) கேட்க வேண்டும். அநீதி நீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என் விஸ்வரூபம் இருக்கும். அதிமுக மீட்பு சட்டரீதியாக தொடர் நடவடிக்கை இருக்கும், எனக் கூறினார்.