அப்பவே சொன்னாங்க.. இப்ப அறிவிச்சுட்டாங்க : தருமபுரியில் வேட்பாளர் மாற்றம்.. சௌமியா அன்புமணி போட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 8:22 pm

அப்பவே சொன்னாங்க.. இப்ப அறிவிச்சுட்டாங்க : தருமபுரியில் வேட்பாளர் மாற்றம்.. சௌமியா அன்புமணி போட்டி!

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மாற்றாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் நகர பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?