டோல்கேட் கட்டணம் எகிறுது.. தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் விலை உயர்வு அமலாகிறது : எந்த டோல்கேட் தெரியுமா?
Author: Udayachandran RadhaKrishnan23 March 2024, 1:58 pm
டோல்கேட் கட்டணம் எகிறுது.. தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் விலை உயர்வு அமலாகிறது : எந்த டோல்கேட் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ. 5 முதல் 20 வரை உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.