கோவையில் ஹோலி பண்டிகை கோலாகலம்.. வர்ணங்கள் பூசி வடமாநில மக்கள் உற்சாக கொண்டாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2024, 6:13 pm
கோவையில் ஹோலி பண்டிகை கோலாகலம்.. வர்ணங்கள் பூசி வடமாநில மக்கள் உற்சாக கொண்டாட்டம்!!
கோவையில் வண்ணப் பொடிகளை பூசி வட இந்தியர்கள் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர். வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்றாகும்.
இந்த பண்டிகையின் போது வண்ண, வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், காந்திபார்க், வெரைட்டி ஹால் பகுதிகளில் அதிகமான வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக் கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.
இதை தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.புரம், பூசாரிபாளையம் பகுதியில் உள்ள டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் மகாராஷ்டிரம், குஜராத், கேரளா, ஆந்திரா, தமிழகம் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து மாநில மக்களும் ஒன்று இணைந்து வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஷவரில் ரசாயனம் கலக்காத இயற்கையான வண்ண கலர் பொடியை கலந்து நடனமாடியவாறு பாடி, ஆடி, குளித்து மகிழ்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் பல்வேறு வகையான உணவு வகைகள் சமைத்து அனைவருக்கும் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்து வழங்கினர்.