பிரதமருக்கு இருக்கும் எண்ணம் கூட CM ஸ்டாலினுக்கு இல்லை… திட்டத்தை முடக்குவதும், முறைகேடு செய்வதும்தான் திமுக ; அண்ணாமலை விளாசல்..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 10:20 am

கோவை பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக கோவை தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை பேரூர் ஆதீன மடத்திற்கு வந்தார்,

அண்ணாமலைக்கு பேரூர் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. ஆதீன பீடத்தில் அமர்ந்திருந்த பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்து நெற்றியில் திருநீர் பூசி ஆசிர்வாதங்களை வழங்கினார்.

பயபக்தியுடன் அண்ணாமலை பேரூர் ஆதீனத்தை குனிந்து வணங்கி தரிசனம் செய்து, திருச்சிற்றம்பலம் மேடையில் அமர்ந்துள்ள நடராஜனை வணங்கி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கோவையில் கடந்து மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும், தேர்தலை காரணம் காட்டாமலும் உடனடியாக சிறுவாணி பில்லூர் அணைகளில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும், அரசியல் தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு கேரளா அரசு உடன் திமுக அரசு முயற்சிக்க வேண்டும்.

மேலும், குளங்களில் நீர் வரும் பாதைக்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும், தமிழக அரசு சரியான முறையில் கையாளுவது இல்லை. ஒரு லட்சம் குளங்களை குஜராத் மாநிலங்களில் மக்கள் பங்களிப்புடன் முதலமைச்சராக இருந்தபோது, மோடி அவர்கள் செய்து காட்டினார்.

நமது தமிழகத்தில் அதே போன்ற தண்ணீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்கு மோடி அவர்களுக்கு எண்ணம் உள்ளது. ஆனால், ஆளுகின்ற அரசு முறையாக செயல்படுத்துவதில்லை. அதே போல, நேரடியாக குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல் சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டும், முறைகேடும் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய அரசு வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசியலோடு, ஆன்மீகம் அரசியலும் பிரிக்கக் கூடாது. எப்பொழுதெல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அவர்கள் நேரடியாக போகாமல், ஆதீனங்கள் போல குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று செயல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0