11 வயது வளர்ப்பு மகள் பலாத்காரம் செய்து கொலை… கண்ணை மறைத்த காமம்… ராணுவ வீரருடன் சேர்ந்து மனைவி போட்ட நாடகம்..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 11:02 am

மதுரை கூடல்புதூர் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரான சிறுமியின் பெரியப்பா மற்றும் பெரியம்மாவை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, தாய் இறந்து விட்ட நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்து சென்றதால், சிறுமி தனது பாட்டி மற்றும் பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சிறுமி வெகுநேரம் ஆகியும் வராதததால், குடும்பத்தினர் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது. சிறுமி மயங்கி கிடந்ததாகவும், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் சடலத்தை மீட்ட கூடல்புதூர் போலீஸôர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்கு அனுப்பினர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவம் நடைபெற்றபோது, சிறுமியுடன் வீட்டில் இருந்த அவரது பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியின் பெரியப்பா ராணுவ வீரரான செந்தில்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து பின்னர் சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து, ராணுவ வீரர் செந்தில்குமார், அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறும்போது, சம்பவம் நடைபெற்ற வியாழக்கிழமை வீட்டில் சிறுமியும், அவரது பெரியப்பாவும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அப்போது, சிறுமியை செந்தில்குமார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, சிறுமி சப்தம் போட்டதால், சிறுமியின் கழுத்தை நெறித்ததால் அவர் உயிரிழந்துள்ளார். அப்போது, வீட்டுக்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டிக்கு இது தெரிய வந்துள்ளது.

கொலையை மறைக்க இருவரும் சேர்ந்து சிறுமியின் சடலத்தை குளியலறைக்குள் போட்டு விட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து சாதாரணமாக பேசியுள்ளனர். அப்போது, குளியலறைக்குள் சென்ற சிறுமி வெகு நேரம் வராததாகக் கூறி, குளியலறை கதவை தட்டுவது போலும், உடைப்பதும் போலும் நடித்து, அங்கு சிறுமி மயங்கி கிடப்பதாக கதறி அழுது அங்குள்ளவர்களை நம்பவைத்து நாடகமாடியுள்ளனர்.

மேலும், மருத்துவமனைக்கும் கொண்டு சென்று சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக நம்பவைத்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதும், கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்ததையடுத்து இருவரும் மாட்டிக்கொண்டனர். இதனால் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்கு மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு, செந்தில்குமாரும், கொலையை மறைக்க உடைந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் பெரியப்பாவான செந்தில்குமார் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுப்பில் வந்துள்ள நிலையில், வளர்ப்பு மகள் என்றும் பாராமல் கொடூர சம்பவத்தை செய்துள்ளார் என்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 413

    0

    0