பரபரக்கும் தேர்தல் களம்… மேளதாளங்களுடன் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 1:08 pm

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.,19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக, அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து விட்டு, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலினும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரும், கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரனும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

அதேபோல, திமுக வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும், திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவும், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 239

    0

    0