எல்லாரும் என்னோட 4-வது கல்யாணத்துக்கு வாங்க.. அதிரடியாக போஸ்ட் போட்ட நடிகை வனிதா..!
Author: Vignesh26 March 2024, 3:25 pm
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா, அருண் விஜய் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி.
இதனிடையே, வனிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா விஜயகுமார் தனக்கு சரியாக பாகம் பிரித்து கொடுக்கவில்லை என நடு ரோட்டில் இறங்கி அவரை நாறடித்த செய்தி ஊரெங்கும் பேசப்பட்டது. அன்றிலிருந்து வனிதாவை விஜயகுமார் வீட்டில் இருந்தே ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இதற்கு யார் முக்கிய காரணம் தெரியுமா? விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்த மூத்த மகளான கவிதா தானாம்.
ஆம், வனிதாவை வீட்டுக்குள் சேர்க்க கூடாது. அவள் வந்தால் தேவையற்ற பிரச்சனைகளை குடும்பத்துக்குள் ஏற்படுத்துவாள் என ஒதுக்கி வைத்தது கவிதா தானாம்.
அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி, பிக் பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இப்போது, சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்ஸ்டா ஸ்டோரியில் ரசிகருடன் கலந்துரையாடினார் வனிதா. அதில், ஒரு ரசிகர் அடுத்த கல்யாணம் எப்போது என கேட்க அவர் எதிர்பாராத எதிர்பாருங்கள் என பதில் கொடுத்திருந்தார். மேலும், ஒரு ரசிகர், எப்போ அடுத்த கல்யாணம்? மறக்காம எங்களை கூப்பிடுங்க என கேட்டுள்ளார். அதற்கு வனிதாவோ, தமிழ்நாட்டையே கூப்பிடுறேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்கிறேன் என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.