பாமக வேடந்தாங்கல் பறவை கிடையாது.. வேடந்தாங்கல் சரணாலயம் : இபிஎஸ் கருத்துக்கு அன்புமணி பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 7:31 pm

பாமக வேடந்தாங்கல் பறவை கிடையாது.. வேடந்தாங்கல் சரணாலயம் : இபிஎஸ் கருத்துக்கு அன்புமணி பதில்!!

‘பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார்.

‘நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை’ என இ.பி.எஸ் கூறியிருந்தார்.

இது குறித்து அன்புமணி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுக்காலமாக பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாங்கள் எங்கும் செல்லவில்லை. நாங்கள் இங்கே தான் இருக்கின்றோம். மற்றவர்கள் நம்மை குறை சொல்கிறார்கள்.

நாங்கள் வேடந்தாங்கல் பறவையல்ல. நாங்கள் வேடந்தாங்கல் சரணாலயம். யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!