செருப்பை வீசி விரட்டிய பள்ளி மாணவர்கள்… பைக்கை திருப்பிக் கொண்டு ஓடிய ஆசிரியர்.. பரபரப்பு சம்பவம்!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 9:55 pm

மாணவர்கள் செருப்பை எடுத்து வீசியதால் ஆசிரியர், தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனால், அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். மாணவர்கள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை திட்டி தீர்த்துள்ளார்.

இந்நிலையில், அந்த ஆசிரியர் வழக்கம்போல் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த மாணவர்கள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்கியுள்ளனர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், தாக்கு பிடிக்காத ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். இது தொடர்பாகன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 359

    0

    0