போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. நள்ளிரவில் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 11:06 am

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. நள்ளிரவில் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்!

மகாரர்ஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை நகரில் கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று உள்ளது. இதில், மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து அந்த பார்லருக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பார்லரில் இருந்த 14 பேர் போலீசாரின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற போட்டியாளரான முனாவர் பரூக்கியும் ஒருவர் ஆவார். இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனினும், ஜாமீனில் வெளிவர கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றை கொடுத்து விட்டு பரூக்கி விடுவிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 417

    0

    0