3 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : CCCA ஒப்பந்நததாரர் நலச்சங்கம் நன்றி!
Author: Udayachandran RadhaKrishnan27 March 2024, 4:44 pm
3 ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : CCCA ஒப்பந்நததாரர் நலச்சங்கம் நன்றி!
CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்று 3 வருடங்களுக்கு பிறகு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்திற்கு ஜிஎஸ்டி வரியை செலுத்த சொல்லி மத்திய மாநில அரசுகள் நோட்டீஸ் அனுப்பப்படுவது ஒரு பிரச்சனையாகவே இருந்தது. இரு அரசுகளும் வரி செலுத்த சொல்லி சங்கத்தை வற்புறுத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் நமது சங்கம் மூலமாக மத்திய அரசோ அல்லது மாநில அரசோ வரி வசூல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். 3 ஆண்டுகள் இந்த வழக்கு நடத்தி வந்தோம்.
மிகப்பெரிய ஜாம்பவான்களால் ஜிஎஸ்டியை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்திருந்தோம். இதற்கு பலனளிக்கும் வகையில், யாரோ ஒருவர் வரி வசூல் செய்ய வேண்டும், இரு அரசுகளும் வரி வசூல் செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக இந்த தீர்ப்பு நமது சங்கத்திற்கு கிடைத்துள்ளது பெருமையளிக்கிறது. இந்த தீர்ப்பால் நமது சங்கத்திற்கும், தொழிலுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இந்த தீர்ப்பு கிடைக்க உதவிய வழக்கறிஞர் துரைராஜ் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என CCCA நலச்சங்கத்தின் செயலாளரும், KCP Infra Limited நிறுவனத் தலைவருமான K.Chandraprakash தெரிவித்துள்ளார்.