ரூ.50,000 எட்டியது தங்கம் விலை… இதுவரை இல்லாத புதிய உச்சம் ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 10:33 am

ரூ.50,000 எட்டியது தங்கம் விலை… இதுவரை இல்லாத புதிய உச்சம் ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில், 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000க்கும் விற்பனையாகிறது. இது தங்கம் வரலாற்றிலேயே புதிய உச்சமாகும். அதேபோல, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!