மளமளன்னு சொத்து சேர்த்த மாகாபா ஆனந்த்.. மனச தேத்திட்டு கேளுங்க..!

Author: Vignesh
28 March 2024, 11:48 am

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

முதன் முதலில் இவர் அது இது எது நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். மாகாபா ஆனந்த் தற்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

ma ka pa-updatenews360

மாகாபா அதன்பின் பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், தன்னுடைய வீட்டின் ஹோம் டுர் வீடியோவை தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்ல அரண்மணையா என்று கமெண்ட் களில் கேட்டு வந்தனர்.

makapa anand

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மாகாபா தற்போது, சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியை பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், அது இது எது என்ற நிகழ்ச்சி புதிதாக துவங்க உள்ளது. அதையும் மாகாபா தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள மாகாபா ஆனந்தி சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

makapa anand

அதன்படி விஜய் டிவியின் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொகுப்பாளர் மாகாபாவின் சொத்து மதிப்பு 30 கோடி முதல் 40 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

makapa anand
  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!