கங்கனா குறித்து சர்ச்சைப்பதிவு… கிளம்பிய கடும் எதிர்ப்பு ; வேட்பாளரை உடனே மாற்றி அறிவித்தது காங்கிரஸ்..!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 12:56 pm

நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இமாசல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாண்டி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான சுப்ரியா ஸ்ரீநேத், தனது X தளத்தில் அவதூறு கருத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் அனைத்து வகையான பெண் வேடங்களிலும் நடித்துள்ளதாகவும், ராணி முதல் தலைவி வரை நடித்திருப்பதாகவும் கங்கனா ரணாவத் பதிலளித்திருந்தார். எனினும், சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிய சுப்ரியா, தனது சமூக வலைதள கணக்குகளை பலரும் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ மர்ம நபர்தான் மிகவும் தரக்குறைவான இந்த பதிவை போட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார்.

எனினும், இந்த சர்ச்சை தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்று கருதும் காங்கிரஸ் தலைமை, காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரியாவுக்கு பதில் வீரேந்திராவை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதையடுத்து, சுப்ரியாவின் சர்ச்சை பதிவை அடுத்து, அவருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 295

    0

    0