10 மாதமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாதவர் நாட்டை எப்படி காப்பாற்றுவார்? பாஜக தலைவர் கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2024, 8:00 pm
10 மாதமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாதவர் நாட்டை எப்படி காப்பாற்றுவார்? பாஜக தலைவர் கேள்வி!
சேலம் மாவட்டம், ஆத்தூரில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் சண்முகநாதன் பேசியதாவது: 10 மாதமாக சிறையில் உள்ள அமைச்சரை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், இந்தியாவை புள்ளி கூட்டணி வைத்து காப்பாற்றுவதாக கூறுகிறார். கௌரவர்களாக உள்ள அவர்கள் வெற்றி பெற வேண்டுமா? பாண்டவராக உள்ள நாம் வெற்றி பெற வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா கூட்டணியில் உள்ள முதல்வர்கள், நேர்மையானவர்கள் என்று சொல்லமுடியுமா?. இரண்டு முதல்வர்கள், சிறையில் இருந்து கையெழுத்து போடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.