நிவாரணம் பெற தகுதி இல்லாத எங்கள் வாக்கு உங்களுக்கு எதற்கு? முதலமைச்சர் தொகுதியில் திமுகவினருக்கு பெண்கள் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 10:59 am

நிவாரணம் பெற தகுதி இல்லாத எங்கள் வாக்கு உங்களுக்கு எதற்கு? முதலமைச்சர் தொகுதியில் திமுகவினருக்கு பெண்கள் கேள்வி!

வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில், மேயர் பிரியா முன்னிலையில் கொளத்தூர் தொகுதி கவுதமபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வாக்கு சேகரித்தனர்.

அப்போது அங்கு திரண்ட மக்கள் திமுகவினரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த பெண்கள், இப்போ எதுக்கு வந்தீங்க? கட்சி சார்பில் நிவாரணம் பெற தகுதி இல்லாத எங்கள் வாக்கு உங்களுக்கு எதற்கு என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டோம். அப்போது ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கொடுத்தீர்கள்.

எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என கேட்டால், கட்சி கொடியை பிடித்தாயா, கோஷம் போட்டாயா, ஊர்வலம் வந்தாயா என வசனம் பேசியதாக கொந்தளித்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் கூடியிருந்த பெண்களை அமைச்சர் சேகர்பாபு சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Muthukumaran Crying In Bigg Boss House என் கிட்டயே உன் வேலையை காட்டறியா? முத்துக்குமரனை விளாசிய பிக் பாஸ்!!
  • Views: - 329

    0

    0