‘என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’… பெண்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்..!!
Author: Babu Lakshmanan29 March 2024, 1:46 pm
கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் பகுதிகளில் பெண்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் இன்று வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன் முன்னதாக, பா.புதுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் வழிபாடு நடத்தினார்.
அதன் பின்னர் குளத்தூர், பாடியூர், கொசவபட்டி, பா.புதுப்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பெண்களின் கால்களில் விழுந்து தேர்தலில் வெற்றி பெற என்னை ஆசிர்வாதியுங்கள் என்று வணங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.