இதுக்கெல்லாம் தனியால் வைக்க முடியாது.. 2 வருட திருமண வாழ்க்கை ரகசியத்தை உடைத்த ஆதி..!
Author: Vignesh30 March 2024, 6:33 pm
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து யாவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ஆதி பிணிசெட்டியை திருமணம் செய்து கொண்டார். ஆதி தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாவராயினும் நா காக்க, மரகத நாணயம், போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர்.
இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும்- ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஆதி, நிக்கு கல்ராணி இருவரும், தங்களது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சில நாட்கள் ஆனது. அது மிகவும் கடினமாக இருந்தது . தனிமையில் வாழும் போது எல்லோரும் இப்படித்தான். நாம் நினைப்பது சரி என்று நினைப்பது தவறு. நாங்கள் இருவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். அதனால் எங்களுக்கு சில விஷயங்கள் ஒற்றுப்போக நேரம் எடுத்தது. இதனாலே எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. 2 வருட திருமணவாழ்க்கையில் நாங்கள் நிறைய சின்ன சின்ன சண்டைகள் போட்டிருக்கிறோம்.
காலையில் நிக்கி பிரஷ் செய்துவிட்டு பேஸ்ட் ஒரு பக்கம் பிரஷ் ஒரு பக்கம் என்று வைத்துவிடுவார். அதேபோல், காபி குடிக்கும் அந்த இடத்திலேயே கப்பை அங்கே வைத்து விடும் குணம் இருக்கிறது. ஏன்மா உன் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஒரு ஆள் வேலைக்கு வைக்க முடியாது என்று நான் கூறி சண்டை போடுவேன். ஆனால் , அதெல்லாம் ரொம்ப கியூட்டாக இருக்கும் என ஆதி அந்த பேட்டியில் கூறினார்.