நீங்க ஜெயிக்க மட்டும் வையுங்க… சிங்கப்பூர் போல மாத்தி காட்டுறோம் ; இபிஎஸ் கொடுத்த சூப்பர் வாக்குறுதி..!!

Author: Babu Lakshmanan
30 March 2024, 7:26 pm

அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது ;- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அதிமுக அழுத்தம் தரும். புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்த திமுக, காங்கிரஸ் சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபடவில்லை.

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதிகமாக வரி விதித்து பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் 10 ஆண்டுகாலமாக ரேசன் கடைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கும் பரவியுள்ளது. அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் போது புதுச்சேரி சிங்கப்பூர் போல மாற்றப்படும், எனக் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1188

    0

    0