தமிழிசையை ஆதரித்து விட்டு வாரிசு அரசியல் பற்றி பேசலாமா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 2:21 pm

தமிழிசையை ஆதரித்து விட்டு வாரிசு அரசியல் பற்றி பேசலாமா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!!

தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது;- “தென்சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மிகப்பெரிய தலைவரான குமரி அனந்தனின் மகள் என்று பேசியிருக்கிறார். இங்கே இப்படி பேசிவிட்டு, கோவைக்குச் சென்று வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். எங்கு பார்த்தாலும் வாரிசுகளாக நிற்கிறார்கள் என்கிறார்.

இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான முகம். தமிழிசை சவுந்தரராஜன் குறித்து தெலுங்கானா மக்களிடமும், புதுச்சேரி மக்களிடமும் கேட்டால் சொல்வார்கள். ஒரு மாநில கவர்னரை முதல்-மந்திரி வரவேற்கப் போகாமல் மறுப்பு தெரிவித்த சம்பவம் முதலில் நடந்தது தெலுங்கானாவில்தான் என தெரிவித்தார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!