தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகம்.. பிரதமருக்கு 3 கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 11:08 am

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவும் தாரை வார்த்து கொடுத்ததே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரசும், திமுகவும் தங்களது குடும்ப நலனைப் பற்றி மட்டுமே எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

  1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
  2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
  3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
    திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே, எனக் கூறியுள்ளார்.
  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?