‘கொண்டாய மைக்-க..’… அமைச்சர் மஸ்தானுடன் மேடையிலேயே சண்டை போட்ட அமைச்சர் பொன்முடி!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 12:11 pm

விழுப்புரத்தில் இப்தார் நோன்பு நிகழ்சியில் மைக்கை பிடுங்கி அமைச்சர்கள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செஞ்சி மஸ்தான் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே பேசத் தொடங்கினர். மஸ்தான் பேசிக் கொண்டிருந்த பொழுது, அமைச்சர் பொன்முடி உள்ளே வந்தார். அப்பொழுது கட்சிக்காரர் ஒருவர் அமைச்சர் வருகிறார். பேச்சை சற்று நிறுத்துங்கள் என கூறினார்.

ஆனால், தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதால், அவர் பேச்சை முடித்தவுடன், கடுகடுப்பாக இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசி முடிக்கும் முன்பே அவரது மைக்கை பிடுங்கினார். அது மட்டுமில்லாமல் செஞ்சி மஸ்ஸானை கண்டபடி திட்டினார். செஞ்சி மஸ்தான் அவர் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில், அந்த மறுப்பை ஏற்க மறுத்த அமைச்சர் பொன்முடி, அவரை கடுமையாக சாடினார்.

இதில் மேடையில் இருந்தவர்கள் அனைவரும் அதனைப் பார்த்து முகம் சுளித்தனர். சமீபகாலமாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கும் பொழுது, விழுப்புரம் பகுதியில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என மறைமுக உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், அவர் எந்த நிகழ்ச்சியிலும், விழுப்புரம் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

தற்பொழுது இப்தார் நோன்பு தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்த பொழுது. முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியிலேயே அமைச்சர் பொன்முடி. அவரை சராமரியாக பொது இடம் என்றும் பாராமல் திட்டியது முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்